‘ஒரு லட்சத்துக்கும்மேல் விருப்புவாக்கு பெற்ற ஒரேயொரு தமிழ் வேட்பாளர்’

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் 5 ஆசனங்களைக்கைப்பற்றி நுவரெலியா மாவட்டத்தில் தாமரை மொட்டு கூட்டணி வெற்றிவாகை சூடியுள்ளமை பல தரப்புகளினதும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு பிறகே ராஜபக்ச தரப்புக்கு நுவரெலியா மாவட்டத்தில் முதலிடத்தை பெறக்கூடிய சூழ்நிலை இம்முறை உதயமானது. ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச அமோக வெற்றிபெற்றிருந்தாலும் மொட்டு கட்சியால் நுவரெலியாவை வெல்லமுடியாமல்போனது.

இந்நிலையிலேயே அந்நிலைமையை ஜீவன் மாற்றியமைத்துள்ளார். அவர் தலைமையில் களமிறங்கிய மொட்டு அணி மாவட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

அதேவேளை, ஜீவன் தொண்டமான்  109,155 விருப்பு வாக்குகளை பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். பொதுத்தேர்தலில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களில் ஒரு லட்சத்துக்கும் மேல் அதிக விருப்புவாக்குகளைப்பெற்ற ஒரேவொரு வேட்பாளர் ஜீவன் தொண்டமானாகும். அதுவும் 26 வயதில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இளம் தலைமைத்துவம்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் பலனாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளது எனவும், எனவே, சமூகத்துக்கு தலைமைதாங்கக்கூடிய வல்லமை ஜீவனுக்கு இருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

Related Articles

Latest Articles