‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ தொடர்பிலான ஜனாதிபதி செயலணிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழ் உறுப்பினரான கருணாகரனுக்கும், இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஒரே நாடு ஒரே சட்டத்தின் ஊடாக சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு முன்னுரிமையளிப்பது குறித்து இதன்போது இருவரும் கலந்துரையாடினர்.