” மாகாணசபை முறையிலுள்ள ஒத்திசைவு பட்டியலை நீக்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றது. அதற்கு இடமளித்தால் ஒற்றையாட்சியை பாதுகாக்க முடியாத நிலை ஏற்படும்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
உத்தர லங்கா சபாகயவின் விசேட கூட்டமொன்று நேற்று முன்திரம் இரவு நடைபெற்றது. இதன்போது அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ச,
” அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது மட்டுமல்ல அதற்கு அப்பால் அதிகாரங்களை பகிர்வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது. ஒத்திசைவு பட்டியலை நீக்குவதற்கான நடவடிக்கையும் இடம்பெறுகின்றது. ஒத்திசைவு பட்டியல் உள்ளது.
13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்நாட்டில் இருந்த எழு ஜனாதிபதிகள் நடவடிக்கை நடவடிக்கைவில்லை. இனியும் அதற்கு இடமளிக்ககூடாது. மாகாணத்துக்கு இறைமையை பகிரவே இங்கு முயற்சி இடம்பெறுகின்றது. ஒத்திசைவு பட்டியல் நீக்கப்பட்டு, முழுமையாக அதிகாரங்களை பகிர்ந்தால் ஒற்றையாட்சியை காக்க முடியாது.” – என்றார் விமல்.










