33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த மாதம் 26 ஆம் திகதி கோலாகலமாக ஆரம்பமானது. இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக விளையாட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வந்த ஒலிம்பிக் தொடரின் போட்டிகள் நேற்று நிறைவு பெற்றன. ஒலிம்பிக் தொடரின் நிறைவு விழாவும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
பதக்கப்பட்டியலில் 40 தங்கம், 44 வெள்ளி மற்றும் 42 வெண்கலம் என அமெரிக்கா முதல் இடம் பிடித்துள்ளது.
40 தங்கம், 27 வெள்ளி மற்றும் 24 வெண்கலம் என சீனா இரண்டாவது இடத்தையும், 20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என ஜப்பான் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.