ஒழுக்கமற்ற ஆசிரியரை அதிபராக நியமிக்க முயற்சி! மக்கள் விசனம்!!

கண்டி, பன்விலை கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ் மொழிமூல பாடசாலையொன்றுக்கு, ஒழுக்கமற்ற ஆசிரியர் என்ற குற்றச்சாட்டின்பேரில் விரட்டியடிக்கப்பட்ட ஒருவரை அதிபராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

மேற்படி பாடசாலையின் பதில் அதிபராக கடமையாற்றிய ஆசிரியர் வெளிநாடொன்றுக்கு சென்றுள்ள நிலையிலேயே இந்த புதிய நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பன்விலை கல்வி வலயத்தில் பிரதான பாடசாலையொன்றில் ஏற்கனவே ஆசிரியராக கடமையாற்றிய இவர் , அங்கு ஆசிரியைகளிடம் மற்றும் மாணவிகளிடமும் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுப்பட்ட காரணத்தால், எச்சரிக்கை விடுக்கப்பட்டு இரு வருடங்களுக்கு முன்னர் இடமாற்றம் வழங்கப்பட்டது.

எனினும், இடமாற்றம் பெற்று சென்ற பாடசாலையிலும் இவரின் ஒழுக்கமற்ற செயற்பாடு காரணமாக விரட்டப்பட்டுள்ளார். இந்நிலையில் மற்றுமொரு பாடசாலைக்கு அவரை அதிபராக நியமிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவுக்கு பெற்றோர்கள் உட்பட மாணவர்களும் கல்விச்சமுகமும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

மேற்படி நியமனம் தொடர்பில் மத்திய மாகாண கல்வி திணைக்களத்துக்கு பல முறைப்பாடுகளை செய்தபோதிலும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கண்டி மகன்

Related Articles

Latest Articles