நுவரெலியாவிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த இ.போ.ச பஸ்ஸின் பின்பக்க சில்லு பேருந்து ஓடிக் கொண்டிருக்கும்போதே கழன்று ஓடிய நிலையில் சாரதியின் சாதுரியத்தால் பாரிய ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
நுவரெலியா – பதுளை வீதியில் அமைந்துள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக இன்று பகல் பயணித்துக் கொண்டிருந்தபோதே இ.போ.ச பேருந்தின் பின்பக்க சில்லு அச்சில் இருந்து திடீரென விலகியது.
இந்நிலையில் சாரதியின் சாமர்த்தியத்தால் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் பேருந்து நிறுத்தப்பட்டது.
நானுஓயா நிருபர்
