ஓமான் ஆட்கடத்தலில் மேலும் இருவர் கைது

இலங்கைப் பெண்களை ஓமானுக்கு கடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களில் ஒருவர் பதுளையைச் சேர்ந்தவர் என்றும் அவர் கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று சரணடைந்ததையடுத்து கைது செய்யப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மற்றைய சந்தேகநபர் குருணாகலில் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles