விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வயோதிபர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ். கோண்டாவில் வடக்கைச் சேர்ந்த ராமன் தர்மலிங்கம் (வயது- 81) என்பவரே உயிரிழந்தவராவார்.
தனது ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்வதற்காக சைக்கிளில் இவர் சென்றபோது, மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
திருநெல்வேலியில் உள்ள மக்கள் வங்கிக்குச் செல்வதற்காக வீதியின் இடது புறத்தில் இருந்து வீதியின் நடுக் கோட்டை கடந்து மறுபுறத்துக்குச் சென்றபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவரை மோதி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
விபத்தில் மயக்கமடைந்த இவர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.










