கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் பசறை பொலிஸாரால் கைது!

கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட மேலும் ஒருவரை பசறை மீதும்பிட்டி பகுதியில் கைது செய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

மீதும்பிட்டி தொழிற்சாலைக்கு அருகாமையில் வசிக்கும் 45 வயதுடைய ஆண் ஒருவரும் 42 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடம் இருந்து 7500 மில்லி லீற்றர் கசிப்பும் 202500 மில்லி லீற்றர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீதும்பிட்டி தொழிற்சாலைக்கு அருகாமையில் இருவர் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடுவதாக பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.எம்.பியரட்ணவிற்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் பேரில் 38118 சாஜன் உபுல், 39315 சாஜன் நிரஞ்சன், 68558 சாஜன் சமில், 1134 பெண் பொலிஸ் சாஜன் லங்கா ஆகியோர் குறித்த பகுதிக்கு விரைந்து சோதனை மேற்கொண்ட போது கேன் ஒன்றில் கசிப்பும் பரல் ஒன்றில் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவருக்கும் எதிராக பசறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

 

ராமு தனராஜா.

Related Articles

Latest Articles