பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீதுமபிடிய – குடுகல்பதனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஏழு பேர் பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28, 31, 36, 40, 48, 56 மற்றும் 58 வயதுகளுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கசிப்பு உற்பத்திக்கு ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்த கோடா மற்றும் சில உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பதுளை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்லவின் பணிப்புரையின் பேரில் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி E.M. பியரட்ணவின் ஆலோசனைக்கு அமைய சாஜன் உபுல் (37118) , சாஜன் நிரஞ்சன் (37315), சமில் (60558) ஆகிய பொலிஸ் அதிகாரிகளினால் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்களை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.










