கசிப்புடன் கைது செய்யப்பட்ட பெண்

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சங்கானை சேர்ச் வீதி பகுதியில் இன்றையதினம் (08)  கசிப்பு மற்றும் கோடா என்பவற்றுடன் 41 வயதுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடம் இருந்து 5 லீற்றர் கசிப்பு மற்றும் 20 லீற்றர் கோடா என்பன மீட்கப்பட்டுள்ளன. குறித்த பெண் முன்னரும் ஒரு தடவை கசிப்புடன் கைதாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பெண்ணை, மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles