இலங்கையில் இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், கடவுச்சீட்டுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒன்லைன் மற்றும் ஒன்லைன் அல்லாத சாதாரண சேவைக்கான கட்டணம் 10 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் சாதாரண சேவைக்கான கட்டணமாக 5 ஆயிரம் ரூபா அறவிடப்பட்டிருந்தது.
அதேவேளை ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிப்பதற்கான கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.