குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை செயலகம் மற்றும் ஏனைய அனைத்து அலுவலகங்களிலும் ஒரு நாள் மற்றும் வழமையான கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று(05) இடம்பெறமாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர கணினி கட்டமைப்பின் பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், ஏனைய சேவைகளும் இன்று(05) நண்பகல் 12.30 மணி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
