நாட்டில் நிலவும் வறட்சியால் தேயிலை உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
வறட்சி காரணமாக, தேயிலை அறுவடை 18 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தம்மிக மஹீபால தெரிவித்தார்.
வறட்சியான வானிலையுடன் தேயிலை உற்பத்தியை பாதுகாப்பதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
நாட்டில் 15 மாவட்டங்களில் நிலவும் கடும் வறட்சியால் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுவருகின்றது.
