ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கடைசிகட்ட தாவல் எதிர்வரும் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதென தெரியவருகின்றது.
இதன்படி ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் சஜித் பக்கம் தாவவுள்ளனர் எனவும், சஜித் கூட்டணியில் உள்ள மாகாண மட்டத்திலான அரசியல் பிரமுகர்கள் சிலர் ஜனாதிபதி பக்கம் சாயவுள்ளனர் எனவும் அறியமுடிகின்றது.
இதற்கான பேச்சுகள் எல்லாம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
அத்துடன், ஜனாதிபதி தேர்தலில் டம்மி வேட்பாளர்களாக களமிறக்கப்பட்ட சிலரும் பிரதான வேட்பாளர்களை ஆதரிக்கும் அறிவிப்பை கடைசி நேரத்தில் வெளியிடுவதற்கு தயாராகிவருகின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி தேர்தலுக்குரிய பரப்புரைகள் முடிவடைவதற்கு இன்னும் 3 நாட்களே எஞ்சியுள்ளன. 18 ஆம் திகதி நள்ளிரவுடன் பரப்புரை சமர் முடிவுக்கு வர வேண்டும்.










