கட்சி தாவினார் தமிதா!

நடிகையும், அரசியல் ஆர்வலருமான தமிதா அபேரத்ன, எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பில் (DNA) இணைந்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து (SJB) விலகுவதாக அறிவித்துள்ளார்.

எஸ்.ஜே.பி.யின் தலைவர் சஜித் பிரேமதாச எனக்கு நியாயம் வழங்காததாலும், எனது ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டாததாலும் நான் எஸ்.ஜே.பியை விட்டு வெளியேற தீர்மானித்தேன் என அபேரத்ன ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஒக்டோபர் 11 ஆம் திகதி வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட இறுதி நாளான கடைசி நேரத்தில் இரத்தினபுரி மாவட்டத்திற்கான SJBயின் வேட்பாளர் பட்டியலில் தமிதாவின் பெயர் சர்ச்சைக்குரிய வகையில் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles