மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தியும், பெருந்தோட்ட கம்பனிகளின் அசமந்தபோக்கை கண்டித்தும் ஊவா மாகாணத்தில் சில நகரங்களில் நாளை கறுப்பு கொடி போராட்டம் நடைபெறவுள்ளது என்று இதொகாவின் பதுளை மாநில இயக்குநர் எஸ். கனகராஜ் தெரிவித்தார்.
“ பசறை நகர், ஹாலிஎல நகர், ஹப்புத்தளை நகர், பல்லகெடுவ நகர், மொனராகலை நகர் ஆகிய இடங்களில் நாளை போராட்டம் நடைபெறும்.
கட்சி, தொழிற்சங்க பேதங்களை கைவிட்டு, அனைவரும் இப்போராட்டத்தில் இணைய வேண்டும்.” – எனவும் கனகராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
ராமு தனராஜ்
