ஹப்புத்தளை நகரில் கட்டாக்காலிகளாக உலாவும் தெரு நாய்களுக்கு, கருத்தடை செய்யும் வேலைத்திட்டம் இன்று ஹப்புத்தளை நகர சபையினரால் மேற்கொள்ளப்பட்டது.
நகரில் கட்டாக்காலி நாய்கள் நகர சபையினரால் பிடிக்கப்பட்டு, மயக்க ஊசிகள் அடிக்கப்பட்ட நிலையில், நாய்கள் மயக்கமுற்று கிடப்பதையும் படங்களில் காணலாம்.

ஹப்புத்தளை நகர சபை மண்டபத்தில் வைத்தே கருத்தடை செய்யப்பட்டது.
எம்.செல்வராஜா, பதுளை
