கட்டாரில் இருந்து நாடு திரும்பிய இலங்கைப் பெண் விமானத்தில் உயிரிழப்பு

வீட்டு வேலைக்காக கட்டார் சென்ற இலங்கைப் பெண், நாடு திரும்பும் போது விமானத்தில் உயிரிழந்துள்ளார்.

மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த குருகே பிரியங்கிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் இன்று (23) அதிகாலை 1.17 மணியளவில் கட்டார் ஏர்வேஸ் விமானமான KR-662 மூலம் கத்தாரின் தோஹாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி வந்துள்ளார் , விமானம் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த போது இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.

Related Articles

Latest Articles