கட்டுப்பணத்தை இழந்த வேட்பாளர்கள் 35 பேர்!

இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களைத் தவிர, ஏனைய 35 வேட்பாளர்களும் தங்களது கட்டுப்பணத்தை இழந்துள்ளனர் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாகத் தெரிவான அநுரகுமார திஸாநாயக்க, இரண்டாம் இடத்தை பெற்ற சஜித் பிரேமதாஸ மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு மாத்திரமே கட்டுப்பணத்தை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றில் அதிகளவான வேட்பாளர்கள் 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.

இதற்கமைய 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்திய நிலையில், அவர்களில் 39 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

ஜனாதிபதி வேட்பாளரான அஹிதுருஸ் மொஹமட் இல்யாஸின் திடீர் மரணம் காரணமாக இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் 38 பேர் மாத்திரமே போட்டியிட்டனர்.

இதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஊடாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு 50,000 ரூபாவும், சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு 75,000 ரூபாவும் கட்டுப்பணமாக அறவிடப்பட்டிருந்தது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles