பதுளை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளின் ஒட்டுமொத்த முழுமையான புள்ளி விபரங்கள் புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் கணனி மயப்படுத்தப்படவுள்ளதாக மாவட்டத்தின் அரசஅதிபர் தமயந்தி பரணகமை தெரிவித்தார்.
இதனடிப்படையில், மாவட்டத்தின் பிரதேச செயலகங்கள் தோறும் இந் நடைமுறை பின்பற்றப்படவுள்ளன. பிரதேசசெயலகப் பிரிவுகளின் மக்கள் தொகை,அவர்கள் ஒவ்வொருவரின் வறுமானம், சொத்து விபரங்கள், தங்கி வாழ்பவர்கள், உழைப்பாளர்கள், மாணவர்கள், க.பொ.த. சாதாரணதரம், உயர்தரம் ,பட்டதாரிகள் ஆகிய விடயங்களின் முழுமையான புள்ளி விபரங்கள், சொந்தவீடு, வாடகைவீடு, உட்கட்டமைப்பு வசதிகள்,பொதுவசதிகள் ஆகியன குறித்தும் விபரங்கள் சேரிக்கப்படும்.
பகுதி கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் மேற்படி புள்ளி விபரங்களைத் திரட்ட ஆரம்பித்துள்ளனர். இத் திட்டத்திற்கமைய, பசறை பிரதேச செயலாளர் அனுராதா நாணயக்கார தற்போதைய நிலையிலேயே மிகவும் துரிதமாக செயற்பாடுகளை ஆரம்பித்து, செயற்பட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
எம். செல்வராஜா, பதுளை