” கண்டா வர சொல்லுங்க ஜீவன கையோடு கூட்டிவாருங்க” – கர்ணன் பட பாணியில் சிவநேசன்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுத்துவிட்டோம் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெற்றிவிழா கொண்டாடியது. ஆனால் இன்று தொழிலாளர்களுக்கு தொழில் சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

20 கிலோ கொழுந்து பறிக்குமாறு அழுத்தம் கொடுக்கும் நிர்வாகத்துக்கு எதிராக தொழிலாளர்கள் போராடிவருகின்றனர். தமக்கு நீதி வேண்டும் எனவும் வலியுறுத்திவருகின்றனர்.

இந்நிலையில் போராட்டம் தொடர்பான காணொளியொன்றை, தொழிலாளர்களின் உள்ளக்குமுறல் என விளித்து சிவநேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அத்துடன், வெற்றி விழா கொண்டாடிய ராஜங்கத்தை கண்டால் வர சொல்லுங்க…….என கர்ணன் பட பாணியில் ஜீவன் தொண்டமானுக்கு சவாலும் விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles