கண்டியில் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரைக்கும் தடுப்பூசி ; பாரத் அருள்சாமி

கண்டி மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும் பிரஜாஷக்தி அபிவிருத்தி செயல்த்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண கொவிட் 19 தடுப்பு குழு கூட்டம் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் ஊடங்கங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,
மத்திய மாகாணத்தில் இதுவரை 813 கொவிட் மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 536 கண்டி 153 நுவரெலியா 124 மாத்தளை மாவட்டங்களில் பதிவாகி உள்ளன. இந்த நிலையில் கண்டி மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக 625,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகள் இன்று முதல் வழங்கபடவுள்ளது.

மேலும், நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 168,406 தடுப்பூசிகள் வழங்கபட்டுள்ளன. இதில் 94% அதிகமாக 60வயதுக்கு மேற்பட்டோரும் 99% ஆசிரியர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பொகவந்தலாவ மஸ்கெலியா வைத்திய அதிகாரிகள் பிரிவுகளுக்கு விஷேட கவனம் வழங்க பட உள்ளது. மேலும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கவும் தீர்மானிக்கபட்டுள்ளது.

பெருந்தோட்ட பகுதிகளில் மற்றும் அதனை அண்டி உள்ள கிராம, நகர பகுதிகளில் மக்கள் தொடர்ந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்கின்றனர் இதன் போது மக்களுக்கு விழிப்புணர்வையும் அவர்களுக்கு தேவையான போக்குவரத்துக்கு ஆவணங்கள் தயார்படுத்தல் சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உதவிகளுக்கு சுகாதார பிரிவினரால் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு நன்றி கூறினர்.

மேலும் 200,000 தடுப்பூசிகள் நுவரெலியா மாவட்டத்திற்கு வழங்க ஆவணம் செய்துள்ளனர்.

எனவே அருகில் தடுப்பூசிகள் வழங்கப்படும் இடங்களில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதுடன் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்வதாக பாரத் அருள்சாமி மேலும் தெரிவித்தார்.

 

Related Articles

Latest Articles