கதிர்காமத்துக்குப் பாத யாத்திரை சென்ற குடும்பஸ்தர் பாம்பு தீண்டி மரணம்

அம்பாறை, பொத்துவில் உகந்த முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமத்துக்குப் பாத யாத்திரை சென்ற ஒருவர் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பிலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய லிங்கசாமி கேதீஸ்வரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் உகந்த முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமத்துக்குப் பாத யாத்திரை சென்று கொண்டிருந்த வேளையில் குமுக்கன் வனப்பூங்கா பகுதியில் பாம்பு தீண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்தநிலையில் குமுக்கன் பகுதியில் பாத யாத்திரிகர்களுக்காக நடமாடும் வைத்திய சேவையில் ஈடுபட்டிருந்த வைத்தியர்கள் அம்புலன்ஸில் திருக்கோவில் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

எனினும், குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles