கத்தி குத்து ஒருவர் உயிரிழப்பு- கிரான்பாஸ் பகுதியில் சம்பவம்

கொழும்பு − கிரான்பாஸ் பகுதியில் கத்தி குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிரான்பாஸ் பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த கொலையுடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபரினால் அடகு வைக்கப்பட்ட வானொலி பெட்டியை மீளப் பெற்றுக்கொள்ள சென்ற வேளையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே, இந்த கத்தி குத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கிரான்பாஸ் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

Latest Articles