அமெரிக்காவில் இருந்து 80 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் கனடா, டொரண்டோ விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த விமான விபத்தில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இருந்து டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் கனடாவின் டொரண்டோ நோக்க வந்தது. குறித்த விமானத்தில் 80 பயணிகள் பயணித்துள்ளனர்.
விமானம் டொரண்டோ விமான நிலையத்தில் தரையிறங்கிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனால் விமானம் அப்படியே தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதனால் விமானத்திற்குள் இருந்த பயணிகள் அலறினர். இந்த விபத்தில், 17 பயணிகள் காயம் அடைந்தனர். இதில் 3 பேர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் குறித்து தற்போது வரை உறுதியான தகவல் வெளியிடப்படவில்லை.
பனிப்புயல் காரணமா கனடாவில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. அந்த வகையில் டொரண்டோவிலும் பனிப்புயல் வீசியதால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.