கனடாவுக்கு பாடம் புகட்டிய மோடி முதுகெலும்புள்ள தலைவர் – மொட்டு கட்சி புகழாரம்!

கனடாவுக்கு எதிராக முதுகெலும்புடன் இந்திய பிரதமர் இன்று எடுத்த முடிவுபோல் அன்று இலங்கையும் எடுத்திருக்க வேண்டும் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எவ்வித ஆதாரமும் இன்றி மஹிந்த ராஜபக்ச மற்றும் சில படையினரை கனடா போர்க்குற்றவாளிகளாக அறிவித்தது. இதற்கு தூதுவரை அழைத்து இலங்கை தரப்பில் ஆட்சேபனை மட்டுமே தெரிவிக்கப்பட்டது.

இந்தியாமீது குற்றஞ்சாட்டிய கனடாவுக்கு எதிராக அந்நாடு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. கனடா அதிகாரி வெளியேற்றப்பட்டுள்ளார். பிரதமர் மோடி முதுகெலும்புடன் செயற்பட்டுள்ளார்.

எமது நாட்டு வெளிவிவகார அமைச்சின் கருத்து சரியானது, அது அரசின் நிலைப்பாடு. இந்தியா இன்று எடுத்த நடவடிக்கையை இலங்கை அன்று எடுத்திருக்க வேண்டும். இலங்கை சிறிய நாடாக இருந்தாலும் சுயாதீன நாடாகும். எனவே, உள்விவகாரங்களில் தலையீடுகள் இடம்பெறக்கூடாது.” – என்றார்.

Related Articles

Latest Articles