இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் இற்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவருமான சிறிதரனுக்குமிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனும் பங்கேற்றிருந்தார்.
அண்மையில் கனடாவுக்குப் பயணமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும், அங்கு கனேடியப் பிரதி அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.
குறித்த சந்திப்புகள் தொடர்பிலும், இலங்கையின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பிலும் மேற்படி சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும், கனேடியத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பொன்றை ஒழுங்கமைக்குமாறு தூதுவரிடம் சிறிதரன் எம்.பி. கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.










