கனேமுல்ல சஞ்சீவ படுகொலை: பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

கொழும்பு, புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்துக்குள் வைத்து நேற்றுமுன்தினம் புதன்கிழமை பாதாள உலகக் கும்பலின் முக்கியஸ்தர் கனேமுல்ல சஞ்சீவ என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 25 வயதுடைய பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி பாதாள உலகக் கும்பலின் முக்கியஸ்தர் கனேமுல்ல சஞ்சீவ என்பவரைச் சுட்டுக்கொலை செய்வதற்குச் சட்டத்தரணி வேடத்தில் சென்ற பிரதான சந்தேகநபருக்கு உதவி செய்த பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்புகளைப் பேணி வந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles