கம்பனிகளுக்கு சார்பாகவே வர்த்தமானி வெளியீடு – வடிவேல் சுரேஷ் போர்க்கொடி!

பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு சார்பான வகையிலேயே வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அது உடனடியாக மாற்றியமைக்கப்பட்டு புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும் – என்று கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுள் ஒன்றான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ் கூறியதாவது.

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்று மட்டும் குறிப்பிட்டு மொட்டையான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வேலை நாட்கள் தொடர்பிலோ அல்லது தொழிலாளர்களின் நலன்சார் விடயங்கள் பற்றியோ அதில் எதுவும் இல்லை. எனவே, பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவதுபோல்தான் இது விடயத்தில் அரசு நடந்துகொண்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தால் கம்பனிகளுக்கே நன்மை. பழம் விழுந்து பாலில் விழுந்ததுபோல அமைந்துள்ளது. எனவே, வர்த்தமானி அறிவித்தல் மாற்றியமைக்கப்படவேண்டும். கூட்டு ஒப்பந்தத்திலிருந்து கம்பனிகள் தன்னிச்சையாக வெளியேறமுடியாது.” – என்றார்.

Related Articles

Latest Articles