மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கொட்டகலை நகரிலும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொட்டகலை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இதொகாவின் பிரமுகருமான ராஜமணி பிரசாந்தின் ஏற்பாட்டில், நூற்றுக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இப்போராட்டம் இடம்பெற்றது.
மக்கள் ஒன்றுதிரண்டு பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு, கோஷங்களை எழுப்பினர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம் கொடு இல்லையேல் மலையகத்தில் இருந்து வெளியேறு என கம்பனிகளை வலியுத்தினர்.
தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி கொட்டகலை நகரில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.










