கம்பளையிலிருந்து கண்டிக்கு செல்லும் பிரதான வீதியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் புனராவர்த்தன நவ குண்டபஷ நூதன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக குடமுழுக்குப் பெருஞ்சாந்தி விழா நாளை புதன்கிழமை காலை 7.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
விநாயகர் வழிபாடு, நித்திய, பூஜை, ஹோமம், மஹாபூர்ணாகுதி என்பனவும் இங்கு இடம்பெறும். நாளை காலை 10.00 மணிக்கு ராஜகோபுரம், விமானங்கள் ஆகியவற்றுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். மயூர பூஜை, வேதகோச சங்கநாதம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க அரோஹரா கோஷத்துடன் அடியார்கள் புடைசூழ பிரதான கும்பங்கள் வீதியுலா வருதல் இடம்பெறும்.
நாளை காலை 10.45 மணிக்கு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமிக்கும் ஸ்ரீ இடும்பன் உட்பட பரிவாரமூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்.










