கம்பளை, மவுண்டல்பெல் பகுதியில் 14 வயது சிறுமியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அச்சிறுமியை தாக்கினர் எனக் கூறப்படும் சிறுமியின் தந்தையும், சித்தப்பாவும் கம்பளை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிபுனி நிமந்திகா என்ற சிறுமிலே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சிறுமி கடந்த திங்கட்கிழமை அவரது சித்தப்பாவின் வீட்டுக்கு சென்றுள்ளாரெனவும், அங்கு சித்தப்பாவால் தாக்கப்பட்டுள்ளாரெனவும் சிறுமியினர் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை சிறுமியின் தந்தையும் அவரை தாக்கி, வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளார். இதனையடுத்து உறவினர் ஒருவர் சிறுமியை அவரின் வீட்டுக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு வைத்தே அவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










