கம்பளை பகுதியில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
கம்பளை – நாவலப்பிட்டிய பிரதான வீதியிலுள்ள தனியார் காப்புறுதி நிறுவன மொன்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
குறித்த நிறுவனத்தில் 25 ஆம் திகதி மூவருக்கு வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து நிறுவனத்திலுள்ள மேலும் சிலரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதன்பிரகாரம் இன்று மேலும் நால்வருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.
போவல, அங்கம்மன, ரத்மால்கடுவ, இஸ்டோர் பீல்ட் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கே வைரஸ் தொற்றியுள்ளது.தொற்றாளர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன், அந்நிறுவனத்தின் ஊழியர்களும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கம்பளை நிருபர் – லாவண்யா
