கரூர் சம்பவத்துக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட சீமான்,
” அனைத்துக்குமே காரணம் அரசு என்று கூறுவதை ஏற்க முடியாது. பாஜக விஜய்க்கு ஆதரவாக இருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. பாஜக எம்.பி.க்கள் குழு இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதைவிட, திமுக அரசை குறை கூறுவதில்தான் மும்முரமாக உள்ளனர்.” என்று குறிப்பிட்டார்.
கரூர் சம்பவத்துக்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவோர், மணிப்பூர் கலவரத்துக்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என கூறவில்லை. இதே நீதிபதி ஆணையத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து 3 மணி நேரம் சாட்சியம் அளித்தேன்.
ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சம்பள உயர்வுடன் பணியிட மாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு உண்மை கண்டறியும் குழு அமைக்காத பாஜக, தற்போது கரூர் சம்பவத்துக்கு மட்டும் அமைப்பது அரசியல்.” எனவும் சீனா சுட்டிக்காட்டினார்.










