திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாம்புக்கடிக்கு இலக்காகி மூன்று மாத கர்ப்பிணித் தாயொருவர் உயிரிழந்துள்ள சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை மொரவெவ ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த இமேஷா குமாரி (வயது 23) என்ற மூன்று மாத கர்ப்பிணித் தாயொருவர் நேற்று மாலை மாடு கட்டுவதற்காகச் சென்றபோது பாம்புக்கடிக்கு இலக்காகி யுள்ளார் எனத் தெரிய வருகின்றது.
மூன்று வயது குழந்தையின் தாயான இந்தப் பெண் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டபோது உயிரிழந்திருந்தார் எனவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றது. மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
