கலஹா நகரில் நேற்று முன்தினம் இரவு இரு வீடுகளும், வியாபார நிலையமொன்றும் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கலஹா நகரில் உள்ள வீட்டில் இருந்த தங்க நகை, நான்கு பவுன் பெறுமதியான தாலிகொடி என்பன களவாடப்பட்டுள்ளன. மற்றைய வீட்டில் இருந்து சைக்கிள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

வியாபார நிலையத்தை உடைத்து தொலைபேசி களவாடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கலஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து விசாரணை ஆரம்பமானது. சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயது சிறுவன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
