மோட்டார் சைக்கிள் மோதி வயோதிப பெண்ணொருவர் பலியான சம்பவம் கலஹாவில் இடம்பெற்றுள்ளது.
தெல்தோட்டை பகுதியில் இருந்து கண்டி நகர் நோக்கி நேற்றிரவு பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், கலஹா நகரில் உள்ள பாடசாலையொன்றுக்கு அருகாமையில் பாதையைக் கடக்க முற்பட்ட பெண்மீது மோதியுள்ளது.
இதனால் படுகாயம் அடைந்த 73 வயதுடைய அப்பெண் கலஹா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
க,யோகா