களமிறங்குவாரா ரணில்? ஜுன் முதல் வாரமே நிலைப்பாடு அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டை எதிர்வரும் ஜுன் முதல் வாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார் என அறியமுடிகின்றது.

நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திலேயே ரணில் இந்த அறிவிப்பை வெளியிடவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவீர்களா அல்லது இல்லையா என்பதை விரைவில் தெரியப்படுத்துமாறு மொட்டு கட்சி ஜனாதிபதியிடம் கோரியுள்ளது. அதேபோல அமைச்சர்கள் சிலரும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இந்நிலையிலேயே ஜுன் முதல் வாரத்தில் இது பற்றி ஜனாதிபதி தெரியப்படுத்துவார் என தெரியவருகின்றது.

நாடாளுமன்ற உரை சாத்தியப்படாதபட்சத்தில், ஜுன் 16 ஆம் திகதி மாத்தறையில் நடைபெறும் கூட்டத்தின்போது தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி அறிவிப்பார் என ஐதேக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles