கஹவத்தை ஹவுப்பே தோட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை.

-இ.தொ.கா உப செயலாளர் ரூபன் பெருமாள் நன்றி தெரிவிப்பு-

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அவதியுறும் மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண தொகை கிடைக்கப்பெறாத குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கிய நிவாரண பொதிகளை வழங்கும் நிகழ்வு கஹவத்தை ஹவுப்பே தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் அவர்கள் தெரிவித்தார்.

ஹவுப்பே தோட்டத்தை சேர்ந்த கொவிட் -19 நோய்த் தோற்றலர்கள் உள்ளிட்ட சுமார் 40குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பிரதேசத்தில் அன்றாட வருமானத்தை இழந்த சில குடும்பங்களுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபசெயலாளர் ரூபன் பெருமாள் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கௌரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களால் நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இதன்போது இ.தொ.கா இளைஞர் அணி அமைப்பாளர்களான சதீஷ் உதயச்சந்திரன், ஜெயகுமார் சுப்பிரமணியம், ஞானம் கணேசன், வேலு தேவதாசன், சசி வினோத்குமார் மற்றும் உதயகுமார் மோகனதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் முன் வந்து மக்களுக்கு உதவி செய்யும் கௌரவ இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கு ஹவுப்பே தோட்ட மக்கள் நன்றி தெரிவித்ததாக ரூபன் பெருமாள் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles