காசாமீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்: குழந்தைகள் உட்பட 200 பேர் பலி

காசாமீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட குறைந்தபட்சம் 200 பேர்வரை பலியாகியுள்ளனர் என பாலஸ்தீன சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – காசா இடையே கடந்த ஜனவரி 19 ஆம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்குவந்த நிலையில் அங்கு நடந்துள்ள மிகப்பெரிய தாக்குதலாக இது அமைந்துள்ளது.

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிணைக் கைதிகளை விடுவிப்பதில் ஹமாஸ் தொடர்ச்சியாக தாமதம் காட்டி வருகிறது.

அதேபோல் இவ்விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் தூதர், மற்றும்பிற மத்தியஸ்தர்களின் ஆலோசனைகளையும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதையடுத்து காசா மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளோம். இந்த நிமிடம் முதல் ஹமாஸ{க்கு எதிரான இராணுவ பலம் படிப்படியாக அதிகரிக்கப்படும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், மத்திய காசாவில் டேர்-அல்-பாலா எனுமிடத்தில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மூன்று குடியிருப்புகள் தரைமட்டமாகின. இதேபோல், கான் யூனிஸ், ராஃபாவிலும் இத்தாக்குதல் நீண்டுள்ளது.

இஸ்ரேலின் இந்த தாக்குதல் சம்பவத்தை அரபுலகம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

Related Articles

Latest Articles