பலாங்கொடையில் பல கிராமப்புற பகுதிகளை மயில்கள் ஆக்கிரமித்து வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். பலாங்கொடை நகருக்கு அண்மித்த கஹட்டபிட்டி, ஹபுகஹகும்புற, பட்டுகம்மன உட்பட்ட பெரும் பரப்புக்களில் இவை சஞ்சரிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இவை நெல், மரக்கறி, பழவகைகளை உண்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இவற்றின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே பொறுப்பு வாய்ந்தவர்கள் இவ்விடயம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி அவற்றின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர். இதேவேளை வகை தொகையின்றி காடுகள் அழிக்கப்பட்டு வருவதனால் மயில்கள் காடுகளை விட்டு உயிர்ப்பாதுகாப்புக்கருதி கிராமங்களை நாடிவருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.










