காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர் .
குறித்த நபர் 54 வயதுடைய 91/2,அலகொடபிடிய,வம் எல மாகடவெவ, மஹியங்கனை பகுதியை சேர்ந்தவர் என மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று இரவு (09/02) 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேற்குறிப்பிட்ட நபரது வீட்டுக்கு பின்னால் வந்த காட்டு யானையை விரட்ட முற்பட்ட போது குறித்த நபர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார்.
காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான குறித்த நபர் பலத்த காயமடைந்த நிலையில் மஹியங்கனை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
