காணாமல்போயிருந்தவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்

UPDATE – காணாமல்போயிருந்தவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்

நுவரெலியா மாவட்டம், தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேட்வெஸ்டன், லூசா பிரிவை சேர்ந்த ஆண்டி மாணிக்கம் (வயது – 72) என்பவர் காணாமல் போயிருந்த நிலையில் இன்று (13.05.2024) கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

வத்தளை பகுதியில் வைத்து அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவரை கண்டுபிடிப்பதற்காக சமூகவலைத்தளங்களில் பதிவான செய்திகளை பகிர்ந்த, ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் குடும்ப உறுப்பினர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

…….

நுவரெலியா மாவட்டம், தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேட்வெஸ்டன், லூசா பிரிவை சேர்ந்த ஆண்டி மாணிக்கம் (வயது – 72) என்பவர் கொழும்பு சென்றிருந்த நிலையில் காணாமல்போயுள்ளார்.

11.05.2024 அன்று முதல் இவர் காணாமல்போயுள்ளார் என்று மட்டக்குளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்குளி, அலிவத்தை பகுதியில் உள்ள தனது மகளின் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த நிலையிலேயே அவர் காணாமல்போயுள்ளார்.

இவரை கண்டாலோ அல்லது இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தாலோ அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கோ தெரியப்படுத்தவும்.

076-1393975
077-3688870

Related Articles

Latest Articles