மஸ்கெலியா , நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய சார்ஜன்ட் ஆனந்த சமரநாயக்க இன்று (01) காலை பேராதனை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பேராதனை – கெட்டம்பே பகுதியிலுள்ள ஆற்றிலிருந்தே அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது..
நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய சார்ஜன்ட் ஆனந்த சமரநாயக்க கடந்த 27 ஆம் திகதி மாலை காணாமல் போயிருந்தார்.
அன்றைய தினம் கடமையை நிறைவு செய்து வீடு செல்வதாக நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்து சென்ற நிலையில் அவர் காணாமல் போனதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
55 வயதான இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இவர் கெலிஓயா – குருதெனிய பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் 36 வருடங்கள் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் சேவையாற்றியுள்ளார்.
நன்றி – நியுஸ்பெஸ்ட்