காதலி உயிரை மாய்த்த விரக்தியால் காதலனும் தற்கொலை

காதலி இறந்து சில நாட்களின் பின்னர் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளது.

பலாங்கொட, வெலிகேபொல பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

குடும்பப் பிரச்சினை காரணமாக குறித்த இளைஞரின் காதலி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மனமுடைந்து கடும் விரக்தியுடன் பொழுதைக் கழித்து வந்த இளைஞர் காதலியின்றி தன்னால் வாழ முடியாது எனக் கூறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞர் இறப்பதற்கு முன்னர் தனது காதலியின் பிரிவு குறித்து தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றையும் பதிவேற்றியுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

Related Articles

Latest Articles