உடபுஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரப்பாணக் தோட்டத்தில் இளைஞர் ஒருவர், நேற்றிரவு வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
19 வயதுடைய வி.தனோஷன் என்ற இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இளைஞர்கள் குழுவொன்று நேற்று மாலை மது அருந்தியுள்ளது. இதன்போது காதல் விவகாரம் தொடர்பில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்தே கத்தி வெட்டு இடம்பெற்றுள்ளது.
ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கொலையில் ஈடுபட்ட நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.










