காபூல் நகரில் மீண்டும் குண்டு தாக்குதல் – மக்கள் பெரும் பதற்றம்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் விமான நிலையத்திற்கு தலிபான்கள் இன்று சீல் வைத்திருந்தனர். சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து, அடுத்த சில மணி நேரத்தில் காபூல் நகரில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டு மக்கள் பீதியில் பல்வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்று வருகின்றனர்.

பெரும்பாலானவர்கள் காபூல் விமான நிலையம் வழியாக தப்பிச்செல்லும் நிலையில் அவ்விமான நிலையத்திற்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் காபூல் விமான நிலையத்திற்கு செல்லும் பாதைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து கண்காணிப்பு பணிகளை தலிபான்கள் தொடங்கியுள்ளனர்.

எனினும் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தை சுற்றி ஏராளமான மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர். இன்னொரு புறம் தரை வழியாக ஏராளமான ஆப்கானியர்கள் பாகிஸ்தானில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இதற்கிடையே காபூல் விமான நிலையத்தில் வெகு விரைவில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடக்க மிக அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்திருந்தார். அவர் மட்டுமன்றி, காபூல் விமான நிலைய பகுதியில் அமெரிக்கர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அமெரிக்க தூதரகமும் எச்சரித்திருந்தது.

காபூல் விமான நிலையம் அருகே ஐஎஸ்ஐஎஸ் கோரோசான் பிரிவு பயங்கரவாதிகள் கடந்த வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் 169 ஆப்கானிய மக்களும் 13 அமெரிக்க படை வீரர்களும் உடல் சிதறி இறந்தது குறிப்பிடத்தக்கது. அதிபர் பைடன் எச்சரித்திருந்த நிலையில், காபூலில் தற்போது மீண்டுமொரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதன் சேதாரம் இன்னமும் முழுமையாக தெரியவரவில்லை. காபூலில் மீண்டும் குண்டுவெடித்ததால், அங்கு பதற்றம் தொற்றியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles