பலாங்கொடை, ஹம்பேகமுவ வீதியில் இன்று இடம்பெற்ற கார் விபத்தில் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பலாங்கொடை பிரதேசத்தில் இருந்து ஹம்பன்தோட்ட பிரதேசம் நோக்கி பயணித்த காரொன்று, பலாங்கொடை ஹம்பேகமுவ பகுதியில் வைத்து வேக கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றுமீது மோதியது.
இதன்போது நால்வர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த நால்வரில் ஒருவர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலைக்கும் ஏனைய மூவர் பலாங்கொடை வைத்தியசாலைக்கும் மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
