காலச்சக்கரம் விசித்திரமானது…!

தனது 24 ஆவது வயதிலேயே மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக சபைக்கு வந்தார். மஹிந்தவின் தந்தையான டி.ஏ. ராஜபக்சவின் மறைவின் பின்னர், சமல் ராஜபக்சவுக்கே சுதந்திரக்கட்சி வாய்ப்பு வழங்க இருந்தது.

அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்க, வேட்புமனு பெறுவதற்காக மஹிந்த ராஜபக்ச, சுதந்திரக்கட்சி தலைமையகம் சென்றிருந்தார்.
அப்போது சுதந்திரக்கட்சி தலைவராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க உள்ளிட்ட வேட்பு மனு குழுவினர் மஹிந்த ராஜபக்சவை பார்த்து சிரித்துவிட்டனராம்.

தனக்கு அப்போது மீசைகூட வளர்ந்திருக்கவில்லை, எனவே, இந்த சின்ன பையனால் வெல்ல முடியுமா என்பதே அவர்களின் சிரிப்பில் இருந்து தெரிந்தது என தனது 50 வருடகால அரசியல் பயண நிறைவில் வழங்கிய நேர்காணலொன்றின்போது மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.

எனினும், வாய்ப்பு கிடைக்க , 1970 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெலியத்த தொகுதியில் போட்டியிட்டு மஹிந்த ராஜபக்ச வெற்றிபெற்றார், இளம் நாடாளுமன்ற உறுப்பினராக சபைக்கு தெரிவானார்,

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது 28 ஆவது வயதில் நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். 1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பியகம தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 70 இல் நடைபெற்ற தேர்தலில் வென்ற மஹிந்த ராஜபக்ச 77 தேர்தலில் தோல்வி அடைந்தார்.
மஹிந்த ராஜபக்சவின் மகன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தனது 24 ஆவது வயதிலேயே நாடாளுமன்றம் வந்தார், 2010 பொதுத்தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் களமிறங்கிய அவர் வெற்றிபெற்றார்.

ரணில் விக்கிரமசிங்க முதலில் பிரதி அமைச்சராகவும், பின்னர் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராகவும் செயற்பட்டார். ரணில் தனது 30 வயதுக்குள் அமைச்சு பதவியை பெற்றிருந்தாலும் நாமல் ராஜபக்ச 34 வயதிலேயே அமைச்சரானார்.

45 ஆவது வயதிலேயே ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரானார், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி நாமல் ராஜபக்சவுக்கு 38 வயதிலேயே கிடைக்கப்பெற்றது.

தனது 50 ஆவது வயதிலேயே ஜனாதிபதி தேர்தலில் 1999 இல் ரணில் விக்கிரமசிங்க களமிறங்கினார், அத்தேர்தலில் சந்திரிக்கா அம்மையார் வெற்றிபெற்றார்.
நாமல் ராஜபக்ச 38 வயதிலேயே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

1988 ஜனாதிபதி தேர்தலில் ரணசிங்க பிரேமதாச போட்டியிடும்போது, ரணில் விக்கிரமசிங்க அமைச்சராக செயற்பட்டார். பிரேமதாசவின் மகனான சஜித் இன்று ஜனாதிபதி தேர்தலில் போடடியிடும்போது ரணில் ஜனாதிபதியாக இருக்கின்றார். பிரதான வேட்பாளராகவும் திகழ்கின்றார்.

ரணசிங்க பிரேமதாச கொலை செய்யப்பட்டதையடுத்து, 1994 ஜனாதிபதி தேர்தலில் ஐதேக சார்பில் காமினி திஸாநாயக்கவே போட்டியிடவிருந்தார். அவர் தேர்தல் பிரசாரத்தின்போது கொல்லப்பட்டதால் அவரின் பாரியார் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

காமினி திஸாநாயக்கவின் மூத்த புதல்வரான நவீன் திஸாநாயக்க ரணில் பக்கமும், இளைய மகன் மயந்த திஸாநாயக்க சஜித் பக்கமும் நிற்கின்றனர்.

2005 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில்தான் கடும் போட்டி காணப்பட்டது. இறுதியில் மஹிந்த வென்றார்.
அதன்பின்னர் 2010,2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடவில்லை. இம்முறை களம் காண்கின்றார்.

ரணில் விக்கிரமசிங்க கடைசியாக களமிறங்கிய தேர்தலில் பிரதான போட்டியாளராக மஹிந்த விளங்கினார், இம்முறை நாமல் வந்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிமாரின் இரு மகன்கள் இம்முறை போட்டியிடுகின்றனர்.

இதுவரை இலங்கையில் நடைபெற்றுள்ள ஜனாதிபதி தேர்தல்களின்போது இரு முனை போட்டியே நிலவியுள்ளது. முதல் சுற்றிலேயே 50.1 வீத வாக்குகளை வெற்றிவேட்பாளர் பெற்றுள்ளார். இம்முறை மும்முனை போட்டி நிலவுகின்றது. இதனால் 2 ஆம் சுற்று பற்றி அதிகம் பேசப்படுகின்றது.

1982, 1988, 1999, 2005 ஆம் ஆண்டுகளில் வாக்கு சீட்டில் இடம்பெற்றிருந்த யானை, கை மற்றும் வெற்றிலை சின்னங்கள் இம்முறை இல்லை. அன்னம் சின்னம் வருமா எனவும் தெரியவில்லை.

ஆர்.சனத்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles